''அனுமதியில்லாமல் மருந்துகளை இறக்குமதி செய்த தனியார் நிறுவனம்" : பின்னணியில் சுகாதார அமைச்சர், அம்பலமான தகவல்



தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் மதிப்பீடு இல்லாமல் 2022 ஆம் ஆண்டில் 38 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய 'Savorite' என்ற தனியார் நிறுவனத்திற்கு பதிவு விலக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப் என்ற பாராளுமன்ற பொது நிறுவனங்கள் குழுவில் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 
இந்த வழியில் மருந்துகளை இறக்குமதி செய்ய 'Savorite' என்ற இந்த தனியார் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க முன்னாள் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர், பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை இறக்குமதி செய்ய 3 மாதங்களுக்கு 'Savorite' என்ற தனியார் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க முன்னாள் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.